தினகரன் -- குற்றம்

காதலியை ஏமாற்றிய காதலன் கைது
23-2-2018 1:20

சென்னை: சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கமலா (24). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தனியார் கால் சென்டரில் வேலை செய்து வருகிறார். எம்.கே.பி நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் (26) என்பவரை கமலா கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். புருஷோத்தமன் திருமணம் செய்து கொள்வதாக கூறி கமலாவிடம் பலமுறை உல்லாசமாக இருந்து உள்ளார். ஆனால், தற்போது திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதுகுறித்து கமலா சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏடிஎம்மில் நூதன திருட்டு
23-2-2018 1:19

பெரம்பூர்: புதுவண்ணாரப்பேட்டை கிராஸ்ரோடு பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இன்டியா ஏடிஎம்மில் நேற்று முன்தினம் பொதுமக்கள் சிலர் பணம் எடுத்தனர். அப்போது பணம் எடுக்க வந்த ஏகாம்பரம் என்பவரிடம் பணம் எடுத்து தருவதாக கூறி, ஒரு வாலிபர் ஏடிஎம் கார்டு பின் நம்பரை பெற்றுக்கொண்டு ஏடிஎம் மெஷினில் போட்டு பார்த்து பணம் இல்லை என கூறி உள்ளார். அவர் சென்றவுடன் 20 ஆயிரத்தை எடுத்துள்ளார். இதேபோல் கோமதி என்ற பெண்ணிடம் திருடி தப்ப முயன்ற போது சிக்கி கொண்டார். விசாரணையில், தண்டையார்பேட்டையை சேர்ந்த மாரியப்பன் (32) என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பல லட்சம் மோசடி: இளம்பெண் மீது வழக்குப்பதிவு: சிந்தாதிரிப்பேட்டை போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
23-2-2018 1:12

சென்னை: பல லட்சம் மோசடி குறித்து இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் பாபு. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என் வீட்டில், பிரியா லட்சுமி (27), விஜய் பாலாஜி என்ற தம்பதி வாடகைக்கு குடியிருந்தனர். அப்போது வங்கியிலும், பங்குச்சந்தையிலும் பெரும் தொகை முதலீடு செய்திருப்பதாகவும், அது தொடர்பான ஆவணங்களை என்னிடம் காட்டி ₹10 லட்சத்து 76 ஆயிரத்தை பிரியா லட்சுமி கடனாக பெற்றார்.அதன்பின்னர், திடீரென யாருக்கும் தெரியாமல் வீட்டை காலி செய்து விட்டார். என்னை போலவே, பலரிடம் பல விதமான காரணங்களை கூறி, பல லட்சம் ரூபாய் பிரியா லட்சுமி மோசடி செய்துள்ளார். இந்த மோசடிக்கு அவரது கணவரும் உடந்தையாக உள்ளார். இதுகுறித்து பிரியா லட்சுமி மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தும், வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே, வழக்குப்பதிவு செய்ய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதே போன்று எஸ்.பாலாஜி, வி.நிர்மலா, கே.சண்முகம் ஆகியோரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை எல்லாம் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் எஸ்.இளம்பரிதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, புகார்தாரர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ADVERTISEMENTS
சென்னை கிரைம்: போலி தங்கக்கட்டி: 1.25 லட்சம் அபேஸ்
23-2-2018 1:11

தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி மகாலட்சுமி (28). இவர்கள் தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் உணவகம் நடத்தி வருகின்றனர். இன்க்க்உ வேலை செய்யும் குன்றத்தூரை சேர்ந்த மோனிஷ் (60) என்பவர் தன்னிடம் அதிக விலை மதிப்புள்ள தங்கக்கட்டிகள் இருப்பதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு தருவதாகவும் உணவக உரிமையாளர் மகாலட்சுமியிடம் கூறி 1.25 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோனிஷை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மற்றொரு ஊழியரையும் போலீசார் கைது செய்தனர். 1 பெரம்பூர் முனியப்பன் தெருவில் நேற்று காலை டெலிபோன் பில்லர் பாக்சில் மர்ம நபர் ஒருவர் பாக்சை திறந்து காப்பர் கம்பியை திருடிக்கொண்டிருந்த போது அந்த பகுதி வழியாக சென்ற தொலைபேசி ஊழியர்கள் அவரை கையும், களவுமாகப் பிடித்து செம்பியம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கோவிலம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த கோபி என்பவரின் மகன் வேலு (38) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து 25 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வேலுவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 2 ராயபுரம் பி.வி.கோவில் தெருவில் வசித்து வருபவர் ஜீவிதா (31). இவருக்கு மாங்காடு மகாலட்சுமி நகரில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டை தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் ஜனார்த்தனன் (51) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இவர், கடந்த 7 மாதங்களாக வீட்டு வாடகை தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஜீவிதா வாடகை பணத்தை தராவிட்டால், வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஜீவிதாவை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனார்த்தனனை கைது செய்தனர். 3 பேசின்பிரிட்ஜ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராஜா தோட்டம், குருசாமி நகர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ஓட்டேரி, பிரிக்ளின் சாலை, திடீர் நகரை சேர்ந்த சுரேஷ் (22) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 4 மடிப்பாக்கம் ஏரிக்கரை ஐயப்பன் நகர் 11வது தெருவி–்ல் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்தவர் ஸ்ரீதர் (64). இவர் நேற்று காலை வீட்டில் உள்ள கழிப்பறையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.5 அம்பத்தூர் சண்முகபுரம், இந்திராநகர், கருணாநிதி தெருவில் 3680 சதூரடியில் ஏரி புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை சென்னை ராயப்பேட்டை பேகம் சாகிப் 2வது தெருவைச் சேர்ந்த அலிமா (57), சூரப்பட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் ஸ்ரீராம் (46) ஆகியோர் உரிமம் கொண்டாடி வந்தனர். இதுதொடர்பாக கடந்த 20ம் தேதி இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராயப்பேட்டையை சேர்ந்த ரபிக் அகமது (33), விருகம்பாக்கத்தை சேர்ந்த நாகூர் கனி (35), ஆதம்பாக்கத்தை சேர்ந்த செல்வம் (20) ஆகிய 3 பேரை நேற்று மதியம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.6கோயம்பேட்டில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கி நேற்று ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, 2 வாலிபர்கள் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக்கை ஓட்டி உள்ளனர். அவர்களை டிரைவர் தட்டிக்கேட்ட போது, அவரை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த குப்தாஸ்பாட்ஷா( 24) மற்றும் இம்ரான் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.8 பேருக்குகுண்டாஸ் சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, அவனியாபுரம், சாவடி தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (30), விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, மேல்மலையனூர் கிராமம், வன்னிய தெருவை சேர்ந்த குமார் (எ) குள்ளகுமார் (41), சென்னை, கிளைவ் பேட்டரி, பீச் லைன் பகுதியை சேர்ந்த ராஜசேரன் (எ) சேரன் (37), கொருக்குப்பேட்டை, ரயில்வே காலனி, சி.பி.ரோடு பகுதியை சேர்ந்த மதி (எ) மதியழகன் (29) காசிமேடு, சூரிய நாராயண தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் (28), கானத்தூர், இந்திரா காந்தி தெருவை சேர்ந்த கார்த்திக் (28), காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம், ஐயஞ்சேரி, வ.உ.சி தெருவை சேர்ந்த ஜான்சன் (32), ஒடிசா மாநிலம், கொறடா மாவட்டத்தை சேர்ந்த பிரசந்தா ரஞ்சன் நந்தா (27) ஆகிய 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூலூர்பேட்டை- கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் ரத்து: போக்ரா- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றம்
23-2-2018 1:8

சென்னை: பொறியியல் பணியின் காரணமாக சூலூர்பேட்டை- கும்மிடிப்பூண்டி இடையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: எளவூர் பணிமனையில் பொறியியல் பணியின் காரணமாக காலை 11 மணிக்கு செல்லும் சூலூர்பேட்டை- கும்மிடிப்பூண்டி இடையிலான மின்சார ரயில் வரும் 23ம் தேதி (இன்று), 25ம் தேதி, 26ம் தேதி, 28ம் தேதி மற்றும் மார்ச் 1ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், எம்எம்சியில் இருந்து இரவு 8.35 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் ரயில் 23ம் தேதி(இன்று), 25, 26, 28 மற்றும் மார்ச் 1ம் தேதிகளில் கும்மிடிப்பூண்டி- சூலூர்பேட்டை இடையில் பகுதியாக ரத்து செய்யப்படும். போக்ரா- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் அரக்கோணத்திற்கு 23ம் தேதி (இன்று), 25, 26, 28 மற்றும் மார்ச் 1ம் தேதிகளில் 135 நிமிடங்கள் தாமதமாக வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென் இந்தியர்களை சீரழிக்க சதி திட்டம் போதை பொருள் விற்ற 13 வெளிநாட்டினர் கைது
23-2-2018 1:7

சென்னை: தென் இந்திய இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் பெங்களூருவில் போதை பொருள் விற்ற 13 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சென்னையில் உள்ள இளைஞர்களையும் போதைக்கு அடிமையாக்க சதி திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் சமீபகாலமாக கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப்பொருள் விற்பனை செய்வது அதிகரித்திருந்ததுடன், மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாகி ஹாஸ்டல்களில் முடங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால், ஆதங்கம் அடைந்த கல்லூரிகளின் நிர்வாகிகள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையரிடம் புகார் செய்தனர். அதன்பேரில், தனிப்படை அமைத்து போதைப்பொருள் விற்பனை ஆசாமிகளை கண்டறிய பெங்களூரு மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் சாதாரண உடையில் பெங்களூருவில் உள்ள கல்லூரிகள் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, குடிசைப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் போதைப்பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இருப்பினும் போதைப்பொருள் விற்பனை முடிவுக்கு வரவில்லை. உள்ளூர் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும், போதைப்பொருள் விற்பனை ஜோராக நடந்தது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக களத்தில் குதித்தனர். அப்போது, உள்ளூர் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த வெளிநாட்டை சேர்ந்த 13 ேபரை தனிப்படை போலீசார் அதிடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தென் இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் திறமை மிக்கவர்களாக இருப்பதாலும், இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் அளவுக்கு, திறமை படைத்தவர்களாக இருப்பதால், தென் இந்திய இளைஞர்களை செயல் இழக்கச்செய்வதுடன், அவர்களை போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கி எதிர்கால இளைஞர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து சமூகத்தை பாழ்படுத்த வேண்டும் என்பதற்காகவே வெளிநாட்டினர் இதுபோன்ற செயல்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சதி திட்டம் பெங்களூருவில் தொடங்கப்பட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விரிவு செய்துள்ளனர். பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஆப்ரிக்கா, தென் ஆப்ரிக்கா, ஜோர்டான், கொரியா போன்ற பல்வேறு நாடுகளை ேசர்ந்தவர்கள், உரிய அனுமதியின்றி பெங்களூருவில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனை செய்வதாகவும், இவர்களில் சிலர் தற்போது சென்னையில் தங்கியிருந்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 13 ேபரும் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பெங்களூருவில் உள்ள அந்தந்த நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.பெங்களூருவை தேர்வு செய்த ரகசியம் என்ன?பெங்களூரு நகரில் தற்போது சர்வதேச தரம் வாய்ந்து கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். போதைப்பொருள் விற்பனை செய்யும் வெளிநாட்டினரும், பெங்களூருவில் படிப்பதாக கூறி தங்கியுள்ளனர். இவர்கள் அங்கு பணியாற்றும் நன்றாக படிக்கும் மாணவர்களை குறி வைத்து முழுக்க முழுக்க போதைப்பொருள் விற்பனை செய்வதிலேயே தங்களின் நேரத்தை செலவிடுகின்றனர். பெங்களூருவில் தான் அதிக அளவில் பிரபல ஐடி நிறுவனங்கள் உள்ளன. ஐடி நகரம் என்றும் கூறுவார்கள். இதை சீர்குலைக்கவே பெங்களூருவை போதை பொருள் வியாபாரிகள் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.சதி திட்டத்தை தடுக்குமா சென்னை காவல்துறை? சென்னையில் போதைப்பொருளுக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது பெங்களூருவில் பிடிப்பட்ட வெளிநாட்டினர் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சி அளித்துள்ளது. எனவே, நம் நாட்டு திறமையான இளைஞர்களை பாதுகாக்கவும் சென்னை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ADVERTISEMENTS
சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு
23-2-2018 1:6

சென்னை: சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் மீரான். இவர், ராயப்பேட்டையில் உள்ள இனிப்பு கடையில் வேலை செய்கிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகளும், 6 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17.1.2015ம் ஆண்டு காணும் பொங்கல் அன்று மீரானின் குழந்தைகள் இருவரும் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தரமணி, மகாத்மா காந்தி நகர், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முகமது பாபு (68), என்பவர் குழந்தைகள் இருவரையும் அழைத்து அவர்களிடம் தவறாக நடந்துள்ளார். உடனே, குழந்தைகள் அழுதுள்ளனர். இதை சற்றும் பொருட்படுத்தாத முதியவர் குழந்தைகளிடம் மிகவும் கீழ்த்தரமாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து மீரான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கு, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முதியவர் முகமது பாபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் ₹15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

சென்னை விமான நிலையத்தில் 6.4 லட்சம் மலேசிய கரன்சி சிக்கியது
23-2-2018 1:5

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 6.4 லட்சம் மதிப்பிலான மலேசிய கரன்சி பிடிபட்டது. பணத்தை எடுத்து வந்த 2 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையம் சர்வதேச முனையத்தில் இருந்து லங்கன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பு வழியாக மலேசிய தலைநகர் கோலாலம்பூர் புறப்பட தயாராக இருந்தது. அதில், பயணம் செய்ய வந்த பயணிகள் சுமார் 2 மணி நேரம் முன்னதாக சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அப்போது, சென்னையில் இருந்து கிருஷ்ணன் பத்மநாபன், கருணாநிதி ராஜாத்தி ஆகியோர் கோலாலம்பூர் செல்வதற்காக புறப்பாடு பகுதி 4ம் கேட் வழியாக உள்ளே சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொழில் பாதுகாப்பு படையினர், அவர்கள் இருவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில், கட்டுக்கட்டாக மலேசியா நாட்டு கரன்சி இருப்பது தெரிந்தது. தலா 20 ஆயிரம் என மொத்தம் 40 ஆயிரம் மலேசயா கரன்சி இருந்தது. இதன் இந்திய மதிப்பு 6.4 லட்சம். அதை கைப்பற்றிய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட இருவரிடமும் பணம் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலூர் அருகே வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டூழியம் கழுத்தை அறுத்து பள்ளி மாணவன் கொலை: படுகாயமடைந்த தாய், சகோதரிக்கு தீவிர சிகிச்சை
23-2-2018 0:42

திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ஆராயி (40). இவர்களுக்கு பாண்டியன் (25), சரத்குமார் (21), விஜி (18), சமையன் (12) ஆகிய 4 மகன்களும், அஞ்சுலட்சம் (17), தனம் (13) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இதில் பாண்டியன், சரத்குமார், விஜி ஆகிய 3 பேரும் பெங்களூரில் தங்கி கூலி வேலை செய்கின்றனர். மகள் அஞ்சுலட்சம் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இளையமகன் சமையன், மகள் தனம் ஆகியோர் தாய் ஆராயியுடன் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் வசித்துள்ளனர். தனம் டி.தேவனூர் கிராமத்தில் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சமையன் அதே ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். ஆராயி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆராயி வீட்டிலிருந்து தனத்தின் அழுகை சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு ஆராயி, தனம் ஆகியோர் தலையில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மேலும் அவர்களுக்கு அருகில் சமையன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தான். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து உயிருக்கு போராடிய தாய், மகளை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் கொலை செய்யப்பட்ட மாணவன் சமையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் உதவி இயக்குநர் சண்முகம் தலைமையிலான குழுவினர் ஆராயி வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை பலாத்காரம் செய்யும் நோக்கில் வந்த மர்ம கும்பலின் வெறிச்செயலால் இச்சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது கொலைவெறி கும்பல் தாக்கியதில், பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENTS
மன்னார்குடி அருகே ஆசிரியையிடம் 7 சவரன் நகை பறிப்பு
22-2-2018 20:26

திருவாரூர்: மன்னார்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியை அமுலுவிடம் இருந்து 7 சவரன் நகை பறிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.