தினகரன் -- கல்வி

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 21ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு
10-7-2017 17:37

நாகை: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 21ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு 21ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கு 22ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்-ஆப் மதிபெண் அடிப்படையில் மொத்தம் 888 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு www.tnfu.ac.in என்ற இனையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்
4-7-2017 15:33

சென்னை: அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. பசுமை வழிச்சாலையில் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழக் கழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் என பதிவாளர் பாலாஜி தெரிவித்துள்ளார். காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.

என்ன படித்தால் வேலை கிடைக்கும்? ஒரு கண்ணோட்டம்
24-6-2017 7:2

பொறியியல் படிப்பை பொறுத்தவரை கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மைனிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொறியியல் படிப்பிற்கு கணிதமே அடிப்படை, எனவே கணித பாடத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த மாணவருக்கு உள்ளதா என்பது எல்லாவற்றையும்விட மிக முக்கியம். கணிதத்தைப் புரிந்துகொள்ள முடியாத மாணவர்களை பொறியாளராக வற்புறுத்தக் கூடாது. இந்தக் கல்லூரியில்தான் படிப்பேன் என்று மாணவர்கள் அடம் பிடிப்பது தவறு. அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் நல்ல ேவலையில் உள்ளனர் எனவே, நீயும் அதையேதான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மாணவர்களை வற்புறுத்தவும் கூடாது.பொறியியல் படிப்பை தேர்ந்ெதடுக்கும் முன்னர் மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை முதலில் எடுக்க வேண்டும். அந்ததுறை குறித்து அலசி ஆராய்ந்து அது நமக்கு சரியாக இருக்குமா என்பதை முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மற்றவர்கள் செல்கிறார்கள் என்பதற்காக ஒரு துறையை தேர்வு செய்யாமல் தனக்கு எந்த துறை பிடித்திருக்கிறதோ, எந்த துறையில் அல்லது படிப்பின் மீது ஆர்வம் இருக்கிறதோ அந்த துறையை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல, பொறியியல் மாணவர்கள் படிப்பதற்கு ஒரே கல்லூரியை தேர்வு செய்யக்கூடாது. முதலில், தாங்கள் படிக்க விரும்பும் துறை உள்ள 5 கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்லூரிக்கும் ெசன்று அங்கிருக்கும் சீனியர் மாணவர்களை சந்தித்து கல்லூரியின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், அதில் எந்த கல்லூரி சிறந்ததோ அந்த கல்லூரியை தேர்வு செய்து படிக்கலாம். மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மாணவர்களின் பொறியியல் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும். பொறியியல் கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 2 மணிநேரம் முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்துவிடுவது நல்லது. அதேபோல, வெளியூரில் இருந்து சென்னைக்கு கலந்தாய்வுக்கு வரும் மாணவர் மற்றும் அவருடன் ஒருவருக்கு பஸ் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தால் உடனடி வேலைஅன்னம்மாள் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், தமிழகத்தில் கோயம்பேடு, தாம்பரம், ஆவடி, மின்ட், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் பெரம்பலூரில் கிளைகளை கொண்டுள்ளது. செயல்முறை வகுப்புகள், உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஸ்மார்ட் கிளாஸ் மூலம் உயர் ரக கல்வியை, குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு அளிக்கிறது. 10வது, 12வது பாஸ் / பெயில் மாணவர்களுக்கும் கட்டணச்சலுகை மட்டுமல்லாமல் ஊக்கத் தொகையுடன் “Star Hotel”களில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு 6500 ரூபாய் மதிப்புள்ள Free Uniform, Note Books வழங்கப்படுகிறது. Carving Class, Spoken English மற்றும் Basic Bartending வகுப்புகளை இலவசமாக கட்டணமின்றி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் குறைந்த கட்டணத்தை சுலபத் தவணையாக EMI செலுத்தும் வசதி மற்றும் “Scholarship”ம் அளிக்கப்படுகின்றன. இங்கு பயின்ற மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மற்றும் “Life Time Placements” அதாவது வாழ்நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இக்கல்வி நிறுவனம் கடந்த 7 வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி தன்னிடம் பயின்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பினை அளிக்கிறது. பொறியியல் கல்வி பயின்றால் தொழில் முனைவோராகலாம் கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்துடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. B.E.,: CSE, ECE, EEE, MECH மற்றும் 7 முதுகலைப் பட்டபடிப்பு P.G., M.B.A. உள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடங்க முனைவோருக்கு கல்லூரிலேயே அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வழிவகை செய்து அதன்மூலம் தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வளாகத்திலேயே கிடைக்க மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.சதன் எலெக்ட்ரானிக்ஸ் ெபங்களூரு கம்பெனியின் RFID ப்ராஜெக்ட், டிரீம்ஸ் அண்ட் டிசைன் சென்னை கம்பெனியின் Android Technology Project, மார்கெட்டிங் துறையில் Insight Onion நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பல சிறிய ஆராய்ச்சிகளை அனைத்து பொறியியல் துறைகளில் செய்து வருகிறது. இந்த கல்லூரிக்கு “சிறந்த பொறியியல் கல்வி அளிக்கும் நிறுவனத்திற்கான விருதை” இங்கிலாந்தில் உள்ள பிராட் போர்ட் பல்கலைக்கழகமும், ராபர்ட் கோர்டன் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கி உள்ளது. கிராமங்கள் தத்தெடுப்பு, NSS, YRC மூலம் கண் சிகிச்சை முகாம்கள், ரத்ததான முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்ச்சிகளில் வருடந்தோறும் பங்கேற்றும் வருகிறது. ரஷ்யாவில் மருத்துவம் படிக்கலாம்இந்தியாவில் பல மாணவ, மாணவிகள் மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும், விமான ஓட்டிகளாகவும் ஆவதற்கு பெரிதும் விரும்புகின்றனர். இவர்களின் வசதிக்காக உலக தரத்திற்கு இணையான மேல்படிப்பை, குறைந்த செலவில் ரஷ்யாவிலுள்ள பல்வேறு மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன. ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ, வோல் கோகிராட், செயின்ட் பீட்டர்ஸ் பர்க், துவேர், கூர்ஸ்க், கஜான் போன்ற நகரங்களில் தரம் வாய்ந்த மிக உயர்ந்த மேற்படிப்பை தரும் மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட தரம்வாய்ந்த கல்வி நிலையங்கள் ஆகும்.ரஷ்யாவில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகங்களில் சேர பிளஸ் 2 வகுப்பில் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 40% மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். பொறியியல் கல்விபெற பிளஸ் 2 வகுப்பில் 40% இருந்தால் சேரலாம். விண்வெளி ஆராய்ச்சி, பொறியியல் தொழில்நுட்பம், உயிர் வேதியியல் உள்ளிட்ட படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் அதகளவில் உள்ளன. ரஷ்ய மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்ழகங்களில் பயில விரும்பும் மாணவர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தை அனுகி விவரங்களை பெறலாம்.

ADVERTISEMENTS
நடுத்தர குடும்ப மாணவர்களும் படிக்க மருத்துவத்துறையில் ஏராளமான படிப்பு இருக்கு
31-5-2017 0:52

மருத்துவம் படிக்கும் நிலையில் வசதி இல்லாத நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் இருக்கலாம். ஆனால், சவால்களை கடந்து மருத்துவ படிப்பை எட்டிப்பிடிப்பது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை. ஆனாலும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்படதேவையில்லை. மருத்துவ துறையில் எண்ணற்ற பிரிவுகளும், ஏராளமான வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தேர்வு செய்து படிப்பதன் மூலம் நமது, ஆர்வத்தையும், ஆசையையும் நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தகுந்த துறைகளில் கவனம் செலுத்தி படிப்பதன் மூலம் வருமானம் மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளையும் பெற்று எதிர்காலத்தை பிரகாசமானதாக மாற்றிக்கொள்ளலாம். பிளஸ் 2வில் அறிவியல் பிரிவை (பர்ஸ்ட் குரூப்) எடுத்துப் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்புடன் தொடர்புடைய படிப்புகள் பல உள்ளன. நர்ஸிங்: எல்லோரும் அறிந்தது நர்சிங் படிப்பு. எப்போதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு உள்ள நல்ல கல்வி. ஜெனரல் நர்ஸிங் (3 ஆண்டு), பிஎஸ்சி (4 ஆண்டு). படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்குப் பிறகு கார்டியோ தெரசிக் நர்ஸிங், சைக்யார்டிஸ்டிக் நர்ஸிங், பிசிசியன் அசிஸ்டன் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்ஸிங் கவுன்சிலில் பதிந்து வைத்தால் அரசுப்பணியும் பெறலாம். முதுநிலை நர்ஸிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வருமானமும் உண்டு.பிசியோதெரபி: உடற்பயிற்சி முறையில் நோய் தீர்க்கும் மருத்துவ முறை பிசியோதெரபி. மூன்று ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பான இதனைப் படித்தால் அனைத்து மருத்துவமனைகளிலும் கண்டிப்பாக வேலைவாய்ப்பு உண்டு. பிசியோதெரபி படித்தால், தனக்கென பெயர்ப்பலகை போட்டு சொந்தமாக பிசியோதெரபி சென்டர் அமைத்துக்கொள்ளலாம். நல்ல வருமானம் கிடைக்கும். ஆடியாலஜி: பேச்சுப் பயிற்சி கொடுக்கும் ஆடியாலஜி பட்டப்படிப்பு. பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம்படுத்தி முறைப்படுத்தும் “ஸ்பீச் தெரபி’ கொடுப்பதற்கான படிப்பு என்று இதனைச் சொல்லலாம். இப்படிப்பு படித்தவர்களைத் தேடி வரும் வாய்ப்புகள் ஏராளம். வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சி கொடுத்து வருவாய் ஈட்டலாம். எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர்: மற்றொரு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள டிகிரி ஆகும். எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர் என்று சொல்லப்படும் பட்டப்படிப்பு. விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து விபத்துக்குள்ளானவர்களை எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது. முதலுதவி எப்படி செய்வது. அறுவை சிகிச்சைக்கு எப்படி விரைவாக உதவுவது முதலியவற்றை கற்றுக் கொடுக்கும் படிப்பு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்வி இதுவாகும். பார்மஸி: மருந்து, மருந்தின் தன்மை, அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், வேதிப்பொருட்களின் தனித்தன்மை, அவற்றை என்ன அளவில் சேர்க்கலாம். அவை போக்கும் நோய்கள், அவற்றால் ஏற்படும் பக்க விளைவு பற்றி படிப்பது இளங்கலை பார்மஸி. 4 ஆண்டு பட்டப்படிப்பான இதனை முடிப்பதன் மூலம் சுயமாக மெடிக்கல் ஸ்டோர் வைக்கலாம். மருத்துவமனைகளில் உள்ள மருந்தகப்பிரிவிலும் பணிபுரியலாம்.லேப் டெக்னீஷியன்: ஓராண்டு பட்டயப்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்பு. மருந்துகள் தொடர்பான ஆய்வுக்கூடங்களிலும், ரத்தப் பரிசோதனைக் கூடங்களிலும் பணிவாய்ப்புகள் அதிகம்.ரேடியோ கிராபி: 2 ஆண்டு பட்டயப்படிப்பு. இதே போலவே ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட் எனப்படும் ஓராண்டு பட்டயப்படிப்பும் உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆஞ்ஜியோகிராம் போன்றவற்றை அறிவது இது. ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவில் பணிபுரிய வாய்ப்புக்கான படிப்புகள் இவை.ஆப்டோமெட்ரி: கண் குறைபாடுகளை அறிவதும், களைவது பற்றி படிப்பது ஆப்டோமெட்ரி. இதில் 4 ஆண்டு இளநிலைப் படிப்பு மற்றும் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளன. பணி வாய்ப்புகளும் தாராளம்.

இது அதிமுக்கியமான தருணம்...
20-5-2017 0:39

பிளஸ் 2 முடித்து கல்லூரிப் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்யவே வரிசைகட்டி நிற்பார்கள். வீட்டில் உள்ள ரத்த பந்தங்களில் துவங்கி, முகம் அறியாதவர்கள் என அத்தனை பேரும் தங்களது அட்வைஸ் பாக்ஸ் திறந்து, ஆளுக்கு ஒன்றாக உங்களது மனதில் தங்களது ஐடியாக்களை குவிப்பார்கள். சிரித்துக் ெகாண்டே இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுங்கள். பெரும்பாலான பெற்றோர், தான் படிக்க விரும்பி படிக்க முடியாமல் போன பாடப்பிரிவை தங்களது குழந்தைகள் மீது திணிக்கின்றனர். இன்னொரு பக்கம் இன்றைக்கு மார்க்கெட்டில் அதிகம் பேர் தேர்வு செய்யும் துறையில் பிடித்து தள்ளி விடுவதையும், பெற்றோர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் ஒரு சில நாட்களில் அவுட் டேட்டட் ஆகி விடுகிறது. வேலைச் சந்தையிலும் இதே நிலை தான். மார்க்கெட் டிரண்டுக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உருவாகிறது. உச்சத்தில் இருக்கும் பல விஷயங்கள் சுவடே இன்றி காணாமல் போகிறது.மாற்றம் ஒன்றே மாறாதது. சமூகத்தின் தேவைக்கு ஏற்ப அதற்கான வாய்ப்புகளும் மாறி வருகிறது. நீங்கள் படித்து முடித்து வெளியில் வரும் போது, அதாவது எந்த ஆண்டில் நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த ஆண்டில் எந்த துறைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதை திட்டமிட வேண்டும். கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் ஆய்வுகளும், ஆலோசனைகளும் இந்த இடத்தில் உங்களுக்கு வழிகாட்டும். முதலில் மார்க்கெட் டிரெண்ட், வேலைக்கான ேதவைகள், தொழில் வாய்ப்புகள், அரசு வெளியிடும் ஐந்தாண்டுத் திட்டங்கள் மற்றும் நிதி நிலை அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன் முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இதற்கான விஷயங்களை மாணவர்கள் இணையம், நட்பு வட்டம், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் சேகரித்து திட்டமிட வேண்டும்.குழந்தைகளின் திறமை மற்றும் விருப்பம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் உயர்கல்வியில் பிடித்து தள்ளப்பட்டு, 50 சதவீதம் மாணவர்கள் தவறான வழிகாட்டுதலால், வாழ்க்கையை பெருஞ்சுமையாக கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உங்கள் குழந்தைக்கு எதில் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என 10ம் வகுப்பிலேயே முடிவு செய்ய வேண்டும். அடுத்ததாக உயர்கல்வி எதை படிப்பது என்பதை மனதில் வைத்து பிளஸ் டூவில் அதற்கான குரூப்பை தேர்வு செய்ய வேண்டும். திட்டமிட்டு படிப்பதன் மூலம் வெற்றி வாய்ப்புகளை எளிதாக்கிக் கொள்ளலாம்.

கல்வி தரத்தில் முன்னிலை வகிக்கும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி: மும்பை நிறுவனத்தின் ஆய்வறிக்கை
28-5-2016 0:24

மும்பையைச் சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்சவசரி என்ற அமைப்பு நாடு முழுவதும் 40 நகரங்களில் உள்ள 7710 கல்வி நிறுவனங்களைப்பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2014-15 ஆம் ஆண்டை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கல்வித்தரத்தை மதிப்பிடுவதற்கான அளவீடுகளில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி முன்னிலை வகிக்கிறது. என்று டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி அமைப்பின் ஆய்வுக்குழு தலைவர் சச்சின் போஸ்லே தெரிவித்துள்ளார். இதைப்பற்றி சென்னைஸ் அமிர்தாவின் முதன்மை செயல் அதிகாரி பூமிநாதன் கூறியதாவது: படிப்பதற்கான வசதிகள்: இந்தியாவில் கல்வித்துறைக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்காக பெரும் எண்ணிக்கையிலான கல்லூரிகள் உள்ளன. அதைப்போல உணவு கலாச்சாரத்தையும் விருந்து உபச்சாரத்தையும் கையாளுகிற ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையும் தனிச்சிறப்பான வகையில் வளர்ச்சியடைந்து வருகிறது. சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படிப்பதற்கான வசதிகள் சிறப்பாக அமைந்துள்ளன. இவ்வசதிகள் மாணவர்கள் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே வேலையில் சேர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. உலகத்தரமான கல்வி: இந்தியாவில் கிராமப்புற அளவிலும் உலகத்தரமான தொழிற்கல்வியை அளித்து அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதுதான் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட்ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியின் நோக்கம். தற்போது நாங்கள்இந்திய அளவில் உயர்ந்த கல்வித் தரத்தையும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நம்பிக்கையையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் இந்தியா வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக இளைஞர்களின் மீது கவனம் செலுத்தினார். அதைப்போல எங்கள் கல்வி நிறுவனமும் 1000க்கும் மேற்பட்ட தகுதியும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களிடம் மறைந்திருக்கும் அவர்களது தினத்திறமைகளை வெளியே கொண்டு வர முயற்சித்து வருகிறது. மேலும் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச் என்று பல மொழிகளில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி, 100 சதவீதம் உறுதியான வேலைவாய்ப்பு, சமுகத்தில் மதிப்பான வாழ்க்கை ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்று உறுதியோடு செயல்பட்டு வருகிறது. முக்கியமாக மாணவர்கள் படிக்கும்போதே பகுதி நேர ேவலைவாய்ப்பின் மூலம் ஒவ்வொரு மாதமும் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பாதிக்கப்படுகிறது. சென்னைஸ் அமிர்தாவின் தனிச்சிறப்பான அம்சம் என்று சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி பூமிநாதன் தெரிவித்துள்ளார். மும்பை நிறுவனம் பாராட்டு: இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய கல்வி நிறுவனங்கள் பற்றிய ஆய்வின்படி, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி உயர்ந்த கல்வித்தரத்தை கொண்டிருப்பதாக மும்பையில் செயல்பட்டு வரும் டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி அமைப்பின் ஆய்வுக்குழு தலைவர் சச்சின் போஸ்லே கூறியுள்ளார். மேலும் அவர், இந்த ஆய்வானது கல்விமுறை, ஆசிரியர்களின் தரம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்களைஅடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் சரியான கல்வி நிறுனத்தை தேர்வு செய்வதற்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

sinemet go sinemet
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis

ADVERTISEMENTS
கிலைடர் ஏவியேஷன் நிறுவனத்தில் விமான பொறியியல் கல்வி
28-5-2016 0:24

கிலைடர் ஏவியேஷன் நிறுவனம், விமானம் சம்பந்தமான படிப்புகளை நடத்தி வருகிறது. இங்கு, விமானி, விமான பணி பெண்களுக்கான படிப்பு, விமான பராமரிப்பு பொறியியல், விமான நிலைய ஊழியர்களுக்கான படிப்பு என விமானம் சம்பந்தமான அனைத்து சேவைகளும் தரப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி, எளிய முறையில், தரமான கல்வி வழங்கப்படுகிறது. செயல்முறை வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம் Capt.ரா.பாலகுமரன் அவர்களால் கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த நிறுவனத்தில் படிக்க அல்லது மற்ற கேள்விகளுக்கு, www.glideraviation.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

cialis cvs coupon cialis coupon cialis 20mg

டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலையில் மாணவர்களை மனித வளங்களாக மாற்றுவதற்கான உலகத்தர கல்வி
28-5-2016 0:24

இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்தட்டு மாணவ, மாணவிகள் சிறந்த கல்வி பெறுவதற்காக ஏ.சி.சண்முகம் என்பவர் கடந்த 1986ம் ஆண்டு கண்ணம்மாள் அறக்கட்டளையை தோற்றுவித்தார். இந்த அறக்கட்டளை வாயிலாக 1988ம் ஆண்டு AICTE ஒப்புதலுடன் டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டு, 1988 முதல் 1999ம் ஆண்டுவரை சென்னை பல்கலைக்கழகத்தின் கீழும், 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழும் சிறப்புடன் செயல்பட்டு வந்தது. 2003ம் ஆண்டு முதல் தாய் மூகாம்பிகை பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டதால் இரண்டையும் அங்கமாக கொண்டு பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் இந்திய அரசாங்கத்தின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அந்தஸ்து பெற்று மிகச்சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், ஜெர்மன் நாட்டின் மிகச்சிறந்த TUV SUD நிறுவனத்தால் அனைத்து வகையிலும் தரமான சிறந்த நிறுவனம் என்று ISO 9001: 2008 தரச்சான்றிதழ் வழங்கப் பெற்றுள்ளது. பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோயை குணப்படுத்தவும், அப்புற்று நோயின் செல்களை தாக்கி அழிக்கவும் பல்வேறு ஆராய்ச்சிகளை எங்கள் ஆய்வுக்கூடத்தில் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக மார்பக புற்றுநோய்க்கு Toll-Like Receptor (TLR) என்ற சமிக்கைகளின் தூண்டுதலை உபயோகித்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி அதுஎவ்வாறு புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது என்று ஆய்வு மேற்கொள்ள புதுடில்லியுள்ள இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் (Dept. of Science & Technology) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமானது (Science and Engineering Research Board) துரித ஆராய்ச்சி என்ற திட்டத்தின் மூலம் ரூ.24 இலட்சம் நிதி உதவியளித்து ஆய்வுகள் நடத்த அனுமதியளித்துள்ளது.இந்திய அரசு பாதுகாப்புதுறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (DRDO) நவீன ஆராய்ச்சி கூடம், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான நவீன ஆராய்ச்சி மையத்திற்காக (ARI) அக்னி ஏவுகணைகளை பாதுகாப்பாகவும் சிறந்த முறையில் செலுத்தவும் “ராக்கெட் மோட்டாருக்கான உட்புற வடிவமைப்பு திட்டம்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அங்கீகாரம் அளித்துள்ளது. இப்பல்கலைக் கழகத்தில் கல்வி கிரேடிங்/ கிரிடிட் முறையில் வழங்கப்படுகிறது. பல்வேறு தொழில் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அதற்கு தகுந்தாற்போல் பாடத்திட்டங்கள் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இப்பல்கலையின் இலக்கு, இக்கல்வி நிறுவனத்தை பொறியியல் பல் மருத்துவம் மற்றும் மருத்துவத் துறையில் உயர் அளவிலான பயிற்றுவித்தல் மற்றும் கற்றுக்கொள்வதற்கான ஆதார மையமாக உருவாக்குவது ஆகும். இதனால் மாணவ, மாணவிகளுக்கு தகுந்த பயிற்சியையும், கல்வியையும் வழங்கி அவர்களை தொழில்நுட்ப ரீதியாக தகுதி படைத்தவர்களாகவும் நடைமுறை செயல்களில் சிறப்பாக செயல்பட தக்கவர்களாகவும் நுனுக்கமான திறமைகள் படைத்த மனிதவளங்களாக பொலிவுபெற செய்யமுடியும். அவைமட்டுமல்லாது, தொழில் ரீதியாக செய்யத்தகுந்தவை, தகாதவை பற்றி எடுத்துக்கூறி இளைய தலைமுறையினர் தொழில்வல்லுனராக மாறுவதற்குதக்க திறமைகளை வளர்த்துக் கொள்ள இந்நிறுவனம் உறுதுணை புரிகிறது.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abilify and coke abilify maintena abilify and coke
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி தரும்: ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி
28-5-2016 0:24

அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம் தமிழகத்தில் கோயம்பேடு, தாம்பரம், ஆவடி, மிண்ட், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணைாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கிளைகளை கொண்டுள்ளது. இங்கு, செயல்முறை வகுப்புகள் உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு SMART CLASS மூலம் உயர் ரக கல்வியை, குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. 3 மற்றும் இரட்டை சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது. B.Sc. சேரும் மாணவர்கள் 3ம் ஆண்டு கட்டணமின்றி படிக்கலாம். 10வது பாஸ்/ பெயில் மாணவர்களுக்கும் கட்டண சலுகை உண்டு. மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் STAR HOTELகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ரூ.6,500 மதிப்புள்ள FREE UNIFORM, CARVING CLASS, SPOKEN ENGLISH மற்றும் BASIC BARTENDING வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. ஏழை, எளிய மணவர்கள் நலன் கருதி குறைந்த கட்டணத்தை, சுலப தவணையாக (EMI) செலுத்தும் வசதி, SCHOLARSHIP வழங்கப்படுகிறது. இங்கு பயின்ற மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மற்றும் LIFE TIME PLACEMENTS அதாவது வாழ்நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. எண்ணற்ற நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் HOTELIERS TALK பத்திரிகையை அங்கமாக கொண்ட இக்கல்வி நிறுவனம், கடந்த 6 வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, 65,000 மாணவர்களுக்கு மேல் வேலைவாய்ப்பை அளித்துள்ளது. இதற்கான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை www.hotelierstalk.com என்ற இணையதளத்தில் காணலாம். இதுதவிர ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்போடு, அன்னம்மாள் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் (WBTO) அங்கீகாரம் பெற்ற IIBT பயிற்சி மையத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை, ஸ்காலர்ஷிப் உடன் அளிக்கப்படுகிறது. இங்கு படிக்க சேர்ந்த சில நாட்களிலேயே பகுதி நேர வேலை மற்றும் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.

drug coupon card prescription coupons drug discount coupons
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

ADVERTISEMENTS
பொறியியலுக்கு இன்னமும் மவுசு: ஏகப்பட்ட படிப்பு; கைநிறைய சம்பளம்
28-5-2016 0:24

* சரியான பிரிவே முக்கியம்* எந்த கல்லூரியும் நல்லது தான்பொறியியல் படிப்பை பொறுத்தவரை இன்னமும் மவுசு குறையவில்லை; சரியான வேலையில்லை என்று சிலர் சொன்னாலும், ஏன் வேலை கிடைக்கவில்லை என்பதையும் ஆராய வேண்டியது முக்கியம். படிக்கும் போது சராசரி மாணவனாக இருந்தாலே போதுமானது; கண்டிப்பாக கைநிறைய சம்பளத்துடன் வேலை நிச்சயம். கடுமையான உழைப்பு, விடா முயற்சி, திறமையை வளர்த்து ெகாள்ளும் பக்குவம் போன்றவை இருந்தாலே வேலை நிச்சயம் மட்டுமல்ல; எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம். இந்த லாவகத்தை மாணவர்கள் புரிந்து கொண்டாலே போதும் எந்த படிப்பும் சுலபமே; வேலையும் கடினமே அல்ல. பொறியியல் படிப்புகளில் எல்லா பிரிவுகளும் நல்ல படிப்பு தான்; கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மைனிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்க பிரிவுகள். பொறியியல் படிப்பிற்கு கணிதமே அடிப்படை, எனவே கணித பாடத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த மாணவருக்கு உள்ளதா என்பது எல்லாவற்றையும்விட மிக முக்கியம். கணிதத்தைப் புரிந்துகொள்ள முடியாத மாணவர்களை பொறியாளராக வற்புறுத்தக் கூடாது. இந்தக் கல்லூரியில்தான் படிப்பேன் என்று மாணவர்கள் அடம் பிடிப்பது தவறு. அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் நல்ல ேவலையில் உள்ளனர் எனவே, நீயும் அதையேதான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மாணவர்களை வற்புறுத்தவும் கூடாது.பொறியியல் படிப்பை தேர்ந்ெதடுக்கும் முன்னர் மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை முதலில் எடுக்க வேண்டும். அந்ததுறை குறித்து அலசி ஆராய்ந்து அது நமக்கு சரியாக இருக்குமா என்பதை முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு துறையை தேர்வு செய்யாமல் தனக்கு எந்த துறை பிடித்திருக்கிறதோ, எந்த துறையில் அல்லது படிப்பின் மீது ஆர்வம் இருக்கிறதோ அந்த துறையை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல, பொறியியல் மாணவர்கள் படிப்பதற்கு ஒரே கல்லூரியை தேர்வு செய்யக்கூடாது. முதலில், தாங்கள் படிக்க விரும்பும் துறை உள்ள 5 கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்லூரிக்காக ெசன்று அங்கிருக்கு சீனியர் மாணவர்களை சந்தித்து கல்லூரியின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், அதில் எந்த கல்லூரி சிறந்ததோ அந்த கல்லூரியை தேர்வு செய்து படிக்கலாம். மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மாணவர்களின் பொறியியல் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும்.

amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda