தினகரன் -- இந்தியா

பரஸ்பர சம்மதத்துடன் நடந்ததால் ஹாதியா திருமணத்தை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து
23-2-2018 1:17

திருவனந்தபுரம்: பரஸ்பர சம்மதத்துடன்தான் ஹாதியா- ஷெபின் ஜகான் திருமணம் நடந்துள்ளது என்பதால் திருமணத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் ெதரிவித்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தை சேர்ந்த அசோகன் மகள் அகிலா. சேலத்தில் ஹோமியோ கல்லூரியில் படிக்கும்போது முஸ்லிமாக மாறி கொல்லத்தை சேர்ந்த ஷெபின் ஜகான் என்பவரை திருமணம் செய்தார். தனது பெயரையும் ஹாதியா என்று மாற்றிக்கொண்டார். இதையடுத்து திருமணத்தை ரத்து செய்யக்கோரி அசோகன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவில் ஷெபின் ஜகானுக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கிறது. மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார்.இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் ஹாதியா - ஷெபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஷெபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஹாதியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நான் முஸ்லிம் மதம் குறித்து நன்கு படித்த பிறகுதான் அந்த மதத்திற்கு மாறினேன். அதனால் ஷெபின் ஜகானின் மனைவியாக வாழ என்னை அனுமதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.அசோகன் தாக்கல் செய்த விளக்கத்தில், என் மகளை மதம் மாற்றிய மஞ்சேரியில் உள்ள சத்ய சரணி அமைப்பிற்கு பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்பு உள்ளது. என் மகளை சிரியாவிற்கு கடத்தி செல்வதுதான் அவர்களது ேநாக்கம். முஸ்லிமாக அவர் மாறியதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவளது பாதுகாப்புதான் எனக்கு முக்கியம். இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் ேநற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்ேபாது நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், ஹாதியா திருமணம் பரஸ்பர சம்மதத்துடன் தான் நடந்துள்ளது. எனவே திருமணத்தை ரத்து செய்ய முடியாது. தற்போது தொடரப்பட்டுள்ளது பலாத்கார வழக்கல்ல. ஷெபின் ஜகானுக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து என்ஐஏ விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ஐதராபாத்தில் பேஸ்புக் தொடர்பு மூலம் திருமணம் செய்வதாக 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது
23-2-2018 1:17

திருமலை: ஐதராபாத்தில் பேஸ்புக் மூலம் தொடர்புக் கொண்டு 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, பலரை பலாத்காரம் செய்து பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டம், பொக்கசமுத்திரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி(28). 5ம் வகுப்பு வரை படித்துள்ளார். வேலைக்கு செல்லாமல் உல்லாசமாக வாழ திட்டமிட்டார். இந்நிலையில், ஐதராபாத் நாச்சாரம், மால்வேபுரம் பகுதியில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஒரு திருட்டு வழக்கில் சிறை சென்று வந்த ரங்கசாமி, 2014ம் ஆண்டு முதல் தொழில்நுட்ப ரீதியாக புது யுத்தியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக பேஸ்புக் மூலம், பெண்களை குறிவைத்து சாட் செய்து, அவர்களுடன் பழகி உள்ளார். அவர்களை திருமணம் செய்வதாக கூறி, நெருக்கமாக இருக்கும் போது போட்டோ எடுத்துக் கொள்வாராம். பின்னர், அந்த பெண்களிடம் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறி பணம் பெற்று தலைமறைவாகி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இந்தநிலையில், ஐதராபாத் லாலாகூடா காவல் நிலையத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளம்பெண், ரங்கசாமி மீது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு புகார் செய்தார்.அதில் ரங்கசாமி, தன்னுடன் பேஸ்புக்கில் பழகி திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ₹6 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும், இதேபோல் பல பெண்களை ஏமாற்றியதாகவும் தெரிவித்தார். அதன்பேரில் லாலாகூடலா போலீசார், வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த ரங்கசாமியை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். விசாரணையில் ரங்கசாமி நாச்சாரம், லாலாகூடா உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, அவர்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் அரசியல் ஆசையா? காங்கிரஸ் தலைவர்களுடன் டிவிட்டரில் அமிதாப் தொடர்பு
23-2-2018 1:12

புதுடெல்லி: பிரபல நடிகர் அமிதாப் பச்சன் காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நண்பர். தற்போது குஜராத் மாநில தூதராக உள்ளார். பாஜ மூத்த தலைவர்களை அவர் டிவிட்டரில் பின்பற்றினார். தற்போது காங்கிரஸ் தலைவர்களையும் பின்பற்றத்தொடங்கி உள்ளார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு வந்த பின் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் இணையதளத்தையும் அமிதாப் பின்பற்றத் தொடங்கி இருக்கிறார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமிதாப்பிற்கு மீண்டும் அரசியல் ஆசை வந்து விட்டதா என்ற கேள்வியும் உருவாகி உள்ளது. அவரது இந்த நடவடிக்கை காங்கிரஸ் மட்டுமல்லாமல், மற்ற கட்சி தலைவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ADVERTISEMENTS
பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லை ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 81வது இடம்
23-2-2018 1:12

புதுடெல்லி: உலக ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 81வது இடத்தை பிடித்துள்ளது. ஊழலும், பத்திரிகையாளர்கள் படுகொலையும் இந்தியாவில் அதிகளவில் நடப்பதாக புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளது.உலகளவில் ஊழல் நடக்கும் நாடுகளின் பட்டியலை ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2017ம் ஆண்டுக்கான பட்டியலை நேற்று இது வெளியிட்டது. அதில், ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் ஊழல் மற்றும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்தப்படும் விதம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, 0 முதல் 100 மதிப்பெண்கள் வரை வழங்கப்பட்டுள்ளன. இதில், 0 மதிப்பெண் என்பது மிக மிக மோசமான நாடு என்றும் 100 மதிப்பெண்கள் மிகவும் நல்ல நாடும் என்றும் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் 180 உலக நாடுகள் இடம் பெற்றுள்ளன. அதில், இந்தியா 81வது இடத்தை பிடித்துள்ளது. ஊழலும், ஊழல் பற்றி செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் மிரட்டப்படுவது அல்லது கொல்லப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளதாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு 79வது இடத்தை பிடித்திருந்தது.

பிப்ரவரி 27ல் ஓட்டுப்பதிவு நாகலாந்து தேர்தலில் போட்டியிடும் 114 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்
23-2-2018 1:12

கோகிமா: நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 196 வேட்பாளர்களில் 114 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது.நாகலாந்தில் முதல்வர் ஜெலியாங் தலைமையில் நாகலாந்து மக்கள் முன்னணி - பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பிப்ரவரி 27ல் சட்டப்பேரவை ேதர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 196 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 114 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் 196 வேட்பாளர்களில் 193 பேர் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர்.இவர்களில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் ராமாங்கோ லோதா ரூ.38.92 கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவர் ஓகா மாவட்டத்தில் சானிஸ் என்ற தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.நாகலாந்து முதல்வர் டி.ஆர்.ஜெலியாங் சொத்து மதிப்பு ரூ.3.52 கோடி. முன்னாள் முதல்வர் நெய்பியூ ரியோ சொத்து மதிப்பு ரூ.15.37 கோடி. மற்றொரு முன்னாள் முதல்வர் கே.எல். சிஷி சொத்து மதிப்பு ரூ.38.20 கோடி. போம்சிங் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாகம்பாய் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் மட்டுமே. ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 59 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.* நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலில் 46 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 5 கோடிக்கு மேல் உள்ளது.* 42 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் உள்ளது. 60 பேருக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் உள்ளது. * 27 வேட்பாளர்கள் தங்கள் வருமான வரவு பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. * 3 வேட்பாளர்கள் கிரிமினல்கள். 3 பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். 16 பேர் 8ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள். 5 பேர் டாக்டர்கள்.* 7 வேட்பாளர்கள் மட்டுமே 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 29 பேர் 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். மீதமுள்ளவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

பாக். அத்துமீறி தாக்குதல்
23-2-2018 1:12

ஸ்ரீநகர்: காஷ்மீரின் உரி செக்டார் பகுதியில், நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஹாஜிபியர் பகுதியில் பாகிஸ்தான் வீசிய பல சிறிய ரக இயந்திர குண்டுகள் வந்து விழுந்து வெடித்தன. இதைத்தொடர்ந்து இந்திய படையினர், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், இரு தரப்பிலும் இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.இதற்கிடையே, தங்கள் பகுதியில் இந்தியப் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறி, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இந்த மாதத்தில் சம்மன் அனுப்புவது இது நான்காவது முறை.

ADVERTISEMENTS
தகவல் உரிமை சட்டத்தை பின்பற்றாத பாஜ, காங்கிரசுக்கு அளிக்கப்படும் வரி சலுகையை ரத்து செய்ய வேண்டும்
23-2-2018 1:3

புதுடெல்லி: தகவல் உரிமை சட்டத்தை பின்பற்றாத பாஜ, காங்கிரஸ் உள்பட 6 முக்கிய கட்சிகளுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை மற்றும் அரசு உதவியை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய தகவல் உரிமை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளான பாஜ, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தகவல் உரிமை சட்டத்தின்படி தகவல்களை அளிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய தகவல் உரிமை கமிஷனர் ஆர்.கே.மாத்தூருக்கு பொதுநல ஆர்வலர் சுபாஷ் அகர்வால் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பாஜ, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், முறையாக தகவல் உரிமை சட்டத்தின்aகீழ் பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பான தகவல் உரிமை ஆணைய விசாரணை இன்று வரை நடக்கவில்லை. எனவே இந்த கட்சிகளுக்கு மத்திய அரசு வழியாக வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிஎப் வட்டி குறைப்பு ஏன்? மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு
23-2-2018 1:2

ஹேமதாபாத்: 2017-18ம் ஆண்டுக்கான பிஎப் வட்டியை 8.65 சதவீதம் என்பதில் இருந்து 8.55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வட்டி குறைப்பை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.இது தொடர்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘பஞ்சாப் வங்கியில் ரூ.11,400 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ள மோசடியை சரிக்கட்ட பொதுமக்களின் பணத்தில் இருந்து எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வருங்கால வைப்பு நிதியில் பொதுமக்கள் வைத்துள்ள பணத்துக்கான வட்டியை குறைத்துள்ளது. பொதுமக்களிடம் பணத்தை கொள்ளையடித்து அவர்களை ஏழைகளாக ஆக்குவதே மத்திய பாஜ அரசின் கொள்கையாக உள்ளது’’ என்றார்.

முதல்கட்ட தேர்தல் பாண்டுகள் மார்ச் 1 முதல் 10 வரை விற்பனை: நிதியமைச்சகம் அறிவிப்பு
23-2-2018 1:1

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான, தேர்தல் பாண்டுகள் முதல்கட்டமாக வரும் 1 முதல் 10ம் தேதி வரை பெருநகரங்களில் உள்ள ஸ்டேட் பாங்கின் குறிப்பிட்ட கிளைகளில் விற்பனையாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2017-18 பட்ஜெட்டில், அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளை வெளிப்படையானதாக ஆக்கவும், ரொக்கமாக கொடுப்பதை தடுக்கவும், நிதிகள் முறையான பணமாக இருக்கச் செய்வதற்காகவும் தேர்தல் பாண்டுகள் வெளியிடப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதற்கான அரசாணை கடந்த ஜனவரி 2ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டில் தேர்தல் பாண்டுகளின் முதல்கட்ட விற்பனை வரும் மார்ச் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் கூறப்பட்டுள்ளதாவது:* கடந்த சட்டப்பேரவை தேர்தல் அல்லது மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் ஒரு சதவீத ஓட்டுக்களை வாங்கிய பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பாண்டுகள் மூலம் நிதி திரட்டலாம்.* இந்த பாண்டுகளை இந்தியர்கள் அல்லது இந்தியர்கள் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் தேர்தல் பாண்டுகளை வாங்கலாம்.* டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களில் உள்ள ஸ்டேட் பாங்கின் குறிப்பிட்ட கிளைகளில் இந்த தேர்தல் பாண்டுகளை வாங்கலாம்.* பதிவு பெற்ற அரசியல் கட்சிகள், இந்த தேர்தல் பாண்டுகளை தங்கள் கட்சியின் பெயரிலான அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில் மட்டுமே 15 நாட்களுக்குள் தேர்தல் பாண்டை பணமாக மாற்றிக் கொள்ள முடியும். அதன்பின்னர் இதை வங்கியில் தாக்கல் செய்தாலும் பணம் கிடைக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENTS
பெங்களூரூ பிலிம் சிட்டியில் தீவிபத்து: 8 கோடி மதிப்பு பொருட்கள் சாம்பல்
23-2-2018 1:0

பெங்களூரு: பிலிம் சிட்டியில் ஒரு அரங்கம் தீ பிடித்து எரிந்ததில் ரூ.8 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. பெங்களூரு புறநகரில் உள்ள பிடதியில் அமைந்துள்ளது இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி. இங்கு ஒரு படப்பிடிப்புக்காக அரங்கம் அமைத்து அதை பிரிக்காமல் அப்படியே வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏறபட்டது. பிலிம் சிட்டியில் இருந்த ஊழியர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியாமல் போனது. இதையடுத்து ஊழியர்கள் பிடதி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அங்கிருந்த பொருட்கள் எதையும் மீட்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.இதன் மூலம் ரூ.8 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.