தினகரன் -- சுற்றுலா

ஊட்டி - மஞ்சூர் சாலையோரம் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
21-02-18

ஊட்டி: சங்க கால இலக்கியங்களில் இடம் பெற்ற குறிஞ்சி மலர், நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பூத்து குலுங்கும். இது மலர் அரிய வகை மலராகவும் கருதப்படுக்கிறது. இந்த மலர்கள் பொதுவாக மலைகள் மற்றும் சரிவுகளில் அதிகளவு வளரக்கூடியது. சில சமயங்களில் மலை முழுவதும் பூத்து குலுங்கும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை முதல் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பல வகையான குறிஞ்சி மலர்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அவ்வப்போது 30 வகையான குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. இந்த மலர்கள் மலை சரிவு முழுவதும் பூப்பதால், தொலைவில் இருந்து பார்க்கும் போது அந்த மலையே நீல நிற கம்பளம் ...

கடுங்குளிர் காணாமல் போச்சு இதமான குளிருக்கு மாறினாள் ‘இளவரசி’
07-02-18

கொடைக்கானல்: கடும் குளிர் நிலை மாறி கொடைக்கானலில் இதமான குளிர் காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இரவு மட்டுமின்றி, அதிகாலையிலும் ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு கடுமையான குளிர் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டது. சுற்றுலாப்பயணிகளின் வருகையும் குறைவாக இருந்ததால் கடை உரிமையாளர்களும் கவலையடைந்தனர்.தற்போது கடும் குளிர் சூழல் மாறி, கடந்த சில நாட்களாக கொடைக்கானல் இதமான குளிருக்கு மாறி வருகிறது. பகலில் வெயிலுடன் இதமான ...

கவர்னர் கிரண்பேடி நடவடிக்கையால் மகிழ்ச்சி: கனகன் ஏரியில் படகு சவாரி செய்ய குவியும் பொதுமக்கள்
06-02-18

புதுச்சேரி, பிப். 6: புதுச்சேரி கனகன் ஏரியில் படகு சவாரி செய்ய நாளுக்கு நாள் மக்கள் அதிகமாக வருகின்றனர். இதனால் அதிகளவில் படகுகளை இயக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுவை கனகன் ஏரியில் ஆகாய தாமரை படர்ந்திருந்த நிலையில், அதனை கடந்த 2 மாதத்துக்கு முன்பு கவர்னர் கிரண்பேடி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆகாய தாமரைகளை அகற்ற உத்தரவிட்டார். இப்பணியை கல்லூரி மாணவர்கள் செய்தனர். இதனையறிந்த கவர்னர், இப்பணியை அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவும் இப்பணியை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். ...

ADVERTISEMENTS
சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய கன்னியாகுமரி
29-01-18

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று வடமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் குவிந்ததால் களைகட்டியது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த வாரம் தான் ஐயப்ப பக்தர்கள் சீசன் முடிவடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறை தினமான நேற்று வடமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கன்னியாகுமரிக்கு வருகைதந்தனர். இவர்கள் முதலில் கடலில் புனித நீராடிவிட்டு பகவதியம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கடல்நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, ...

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
29-01-18

பென்னாகரம் : விடுமுறை தினமான நேற்று, குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகளால் ஒகேனக்கல் களை கட்டியது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை தினமான ேநற்று, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மெயினருவியில் கொட்டிய தண்ணீரில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், பரிசலில் பயணம் செய்து காவிரியின் அழகையும், தொங்கும் பாலத்தில் இருந்து நீர் வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் ...

பெரியார் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள் தடுப்பு வேலி இல்லாததால் தொடர் விபத்து
29-01-18

சின்னசேலம்: விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார், மேகம், எட்டியாறு, செருக்கல் போன்ற நீர் வீழ்ச்சிகள் உள்ளது. இதில் பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகள் மட்டும் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக உள்ளது. அதிலும் மேகம் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க செல்ல வேண்டுமானால் நீண்டதூரம் ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டும். இதனால் மேகம் நீர்வீழ்ச்சிக்கு பெரும்பாலும் வாலிபர்கள் கூட்டமே செல்லும். ஆனால் பெரியார் நீர்வீழ்ச்சி வெள்ளிமலை சாலையின் ஓரத்திலேயே உள்ளதால், இந்த நீர்வீழ்ச்சிக்குத்தான் புதுவை, கடலூர் போன்ற வெளியிடங்களில் இருந்து அதிகளவில் ...

ADVERTISEMENTS
சுற்றுலா பயணிகளால் களைகட்டிய ஒகேனக்கல்
22-01-18

பென்னாகரம்: விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் களை கட்டியது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மெயினருவியில் கொட்டிய தண்ணீரில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்த அவர்கள், பரிசலில் பயணம் செய்து காவிரியின் அழகையும், தொங்கும் பாலத்தில் இருந்து நீர் வீழ்ச்சியின் அழகையும், முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் ...

தொடர் விடுமுறை எதிரொலி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
17-01-18

இலுப்பூர்: தொடர் விடுமுறை காரணமாக சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் மணப்பாறை சாலையில் புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. இங்குள்ள சமணர் படுகை, குகை ஓவியம் ஆகியவை உலக புகழ் பெற்றவை. இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், சுற்றுலாத்துறை சார்பில் சிற்பங்கள், மரங்கள் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட பூங்கா மற்றும் படகு குழாம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, ...

பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து சுரபுன்னை காடுகளை ரசித்தனர்
17-01-18

புவனகிரி: தமிழகத்தில் சுற்றுலா மையங்களில் புகழ்பெற்ற தலமாக சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் சுரபுன்னை காடுகள் இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. இவ்வகை சுரபுன்னை காடுகளை படகில் சென்று சவாரி செய்து பார்ப்பது ஆனந்தமாக இருக்கும். கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பசுமையாக காணப்படும் இந்த காடுகள் கண்கொள்ளா காட்சியாகும். காணும் பொங்கலையொட்டி நேற்று களை கட்டியது. தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ...

ADVERTISEMENTS
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்பு
17-01-18

வேலூர்: காணும் பொங்கலையொட்டி வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான மக்கள் திரண்டனர். பொங்கல் பண்டிகையொட்டி பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளான நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. காலையில் குளித்து புத்தாடை அணிந்து பெரியவர்களிடம் ஆசி பெற்று அவர்களிடம் அன்பளிப்புகளை பெற்றனர். மேலும் சுற்றுலாத்தலங்களிலும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் அமிர்தி வன உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால், விடுமுறை நாளான நேற்று ...