தினகரன் -- உலகம்

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இந்தியா, கனடா ஆகும் : கனடா பிரதமர் பெருமிதம்
22-2-2018 17:38

டெல்லி : உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இந்தியா, கனடா ஆகும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் கனடாவும் இந்தியாவும் உறுதியாக இருக்கிறது என்றும் கூறினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏழு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்திர் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாலத்தீவில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் : வெளியுறவுத்துறை
22-2-2018 17:7

மாலே : மாலத்தீவில் மீண்டும் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாலத்தீவில் அரசால் கைது செய்யப்பட்ட அரசியல்தலைவர்கள், தலைமை நீதிபதியை விடுவிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

ரஷ்யாவில் உள்ள விவிஇஆர் அணுஉலைக்கு சர்வதேச விருது அறிவிப்பு
22-2-2018 13:5

மாஸ்கோ : உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவில் உள்ள அணுஉலை ஒன்றுக்கு பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்ட அணுஉலை என்ற சர்வதேச விருது கிடைத்திருக்கிறது. 1200 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணுஉலைக்குள் முதன் முறையாக ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ரஷ்ய அணுமின் நிலைய அதிகாரி கூறியதாவது: தற்போது நாங்கள் இருப்பது அணுமின் நிலையத்தின் மைய கட்டுப்பாட்டு அறை; மையக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான், அணுமின் நிலையம் முழுவதும் இயக்கப்படுகிறது. டர்பைன்கள், முக்கிய உபகரணங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த 6 பேர் இங்கு பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்தார். இந்த 1200 மெகா வாட் விவிஇஆர் அணுஉலை உலகின் பல்வேறு நாடுகளில் கட்டுமானப்பணியில் இருந்தாலும் உலகத்திலேயே முதல் முறையாக இங்கு தான் அமைக்கப்பட்டது. மேலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் வேலை பணியாற்றும் பணியாளர்கள் பல்வேறு கட்ட பயிற்சிக்குப் பின்பு தான் இங்கு அழைத்து வரப்பட்டு இதன் செயல்பாட்டுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENTS
பெருவில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 44 பேர் பலி..!
22-2-2018 12:59

பெரு நாட்டில் இரண்டு அடுக்குகளை கொண்ட பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 44 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்குள்ளான பேருந்து உயரமான மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. பல உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த கொடூர விபத்து Ocona பகுதியில் அமைந்துள்ள Panamericana Sur நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. மேற்கண்ட நெடுஞ்சாலையின் ஆபத்தான வளைவு பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் பேருந்து நசுங்கி சின்னாபின்னமாகியுள்ளது வெளியான புகைப்படங்களில் காண முடிகிறது.விபத்து நடந்த பகுதிக்கு அருகாமையில் ஆறு ஒன்று ஓடுவதால், பல உடல்கள் அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு குழுவினர் ஆற்றில் குதித்து உடல்களை மீட்டு கரை சேர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதே போன்ற பேருந்து விபத்தில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்த சம்பவம் நினைவுகூறத்தக்கது.

சிரியாவில் கொடூரத் தாக்குதல் : கொத்து கொத்தாக மடியும் மக்கள்....10 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் அதிகளவில் பலி
22-2-2018 11:42

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவு படையினர் கடந்த 3 நாட்களாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவியை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். இந்த சூழலை பயன்படுத்தி போராளிகளை விரைவில் அழிக்கும் நோக்கில் அரசு தரப்பு கூட்டுபடையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் தொடர் வான் தாக்குதல்களை நடத்தினர். கூத்தா, டூமா, மிஸ்ராபா உள்ளிட்ட இடங்களில் நடந்த வான்வழி தாக்குதல்களில் 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் 10 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிரியா அரசு படையினர் கொடூர தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மருத்துவமனை மீது தாக்குதல்சிரியாவின் கவுடா பகுதியில் கடந்த இரு வாரமாக நடத்தப்படும் தாக்குதல் குறித்து கிளர்ச்சியாளர்கள் பகுதியில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பசாம் வேதனையுடன் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, கவுடாவில் பேரழிவு நடந்துக் கொண்டிருக்கிறது. எங்களிடம் மருத்து, உணவு, தங்க இடம் என்று ஏதுவும் இல்லை. அவர்கள் அனைத்தையும் குறி வைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். சர்வதேச சமூகம் எங்களை கைவிட்டுவிட்டது என்று சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களிடம் துப்பாக்கி : டொனால்ட் ட்ரம்ப் யோசனை
22-2-2018 10:52

வாஷிங்க்டன் : அமெரிக்கப் பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருந்தால் இதுபோன்ற துப்பாக்கிச்சூட்டுகளைத் தவிர்க்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்கள்-ஆசிரியர்கள் தன்னை வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது டிரம்ப் இந்த யோசனையைத் தெரிவித்தார் .

ADVERTISEMENTS
காலிஸ்தான் தீவிரவாதியான ஜெஸ்பால் உடன் கனடா பிரதமர் மனைவி: புகைப்படத்தால் பரபரப்பு
22-2-2018 8:45

காலிஸ்தான் தீவிரவாதி என அறிவிக்கப்பட்ட ஜெஸ்பால், கனடா பிரதமர் மனைவி சோஃபியுடன் எடுத்த புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவில்லை என கனடா பிரதமர் தெரிவித்த நிலையில் புகைப்படம் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வரை நேற்று சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த நிலையில் புகைப்படம் வெளியானது.

இலங்கையில் குண்டுவெடிப்பு: ராணுவத்தினர் 12 பேர் உள்பட 19 பேர் காயம்
22-2-2018 6:5

கொழும்பு: இலங்கையில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயமடைந்தனர்.இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து தியாதலவாவில் உள்ள ராணுவ முகாமுக்கு பேருந்து ஒன்றில் ராணுவ வீரர்கள் நேற்று அதிகாலை சென்றனர். அப்போது, திடீரென வெடிகுண்டு வெடித்ததில் பேருந்து பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 7 ராணுவ வீரர்கள், 5 விமானப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. குண்டுவெடிப்பில் பேருந்து பலத்த சேதமடைந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.‘‘இது தீவிரவாத செயலாக இருக்க முடியாது. பேருந்தில் இருந்த வெடிப்ெபாருள் வெடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகே குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியும். சம்பவம் குறித்து ேபாலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்' என்று ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாக். உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: பிஎம்எல் கட்சி தலைவராக ஷெரீப் நீடிக்க முடியாது
22-2-2018 6:1

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவராக நீடிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ெஷரீப் இருந்தார். வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துகள் வாங்கி குவித்த வழக்கில், இவரை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலையில் தீர்ப்பளித்தது. ஆனால், இவர் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடித்து வந்தார். இதற்கேற்ப ‘தேர்தல் சட்டம் -2017’ மூலமாக திருத்தம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பாகிஸ்தானின் தெஹ்ரீக் ஐ இன்சாப், அவாமி முஸ்லீம் லீக், பாகிஸ்தானின் மக்கள் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த தலைமை நீதிபதி சஹிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பை அளித்தது. அரசியல் அமைப்பு சட்டம் 62, 63ன்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் அரசியல் கட்சியின் தலைவராக நீடிக்க முடியாது என தீர்ப்பளித்தது. இதன் மூலம், பிஎம்எல்-என் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஷெரீப் விலக வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இது அவருக்கு விழுந்த பலத்த அடியாக கருதப்படுகிறது.

ADVERTISEMENTS
ஜெர்மனியில் சாலை விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய ஆப்பிள் கை கடிகாரம்
21-2-2018 17:23

ஜெர்மனி: ஜெர்மனியில் சாலை விபத்தில் சிக்கிய பெண்ணை, அவர் அணிந்திருந்த ஆப்பிள் கை கடிகாரம் அளித்த அவசர தகவலால் உயிருடன் காப்பாற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெர்மனியில் 9 மாத குழந்தையுடன் காரில் சென்ற கேசி ஆண்டர்சன் என்ற இளம் பெண் எதிர்பாராத விதமாக சாலைவிபத்தில் சிக்கினார். அப்போது அவர் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரத்தில் ஆபத்து காலங்களில் அழைப்பதற்காக இணைக்கப்பட்டிருந்த 911 என்ற எண்ணை அழுத்தியுள்ளார். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனத்துடன் வந்த மீட்புக்குழுவினர் விபத்தில் பலத்த காயமடைந்த கேசி ஆண்டர்சனுக்கு மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக அவரது குழந்தை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.இந்த விபத்து நிகந்தபோது கேசி ஆண்டர்சன் ஆப்பிள் கை கடிகாரம் உதவியுடன் 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அளித்த அவசர தகவலில் கூறியுள்ளதாவது விபத்துக்குள்ளானதும் எனது காரிலிருந்து பொருட்கள் அனைத்தும் மேலே பறந்தன. நான் காரின் ஸ்டியரிங்கில் முட்டியதால் எனது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டுகிறது. நான் எதை பார்த்தாலும் கறுப்பாகவே தெரிகின்றன. எனது கைகளின் உதவியுடன் எனது போனை எடுத்தேன், எதுவும் தெரியாததால் போனை உபயோகிக்க முடியவில்லை. அதன் பின்னர் தான் எனது ஆப்பிள் கை கடிகாரம் உதவியுடன் 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டேன் என கூறியுள்ளார்.