தினகரன் -- ஆன்மிகம்

கதலிவனம்
22-02-18

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருக்குளம்பூர் திருத்தலத்தில் இருக்கிறது ‘ஸ்ரீ கதலிவனேசுவரர் திருக்கோயில்’. இத்தலத்து தலவிருட்சம் வாழை மரம். இத்திருக்கோயிலின் உட்பிராகாரத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வளர்கின்றன. இம்மரங்களுக்கு யாரும் தண்ணீர் ஊற்றுவது இல்லை. மேலும் இம்மரங்களில் கிடைக்கும் வாழைப்பழங்கள் பஞ்சாமிர்தம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பது ...

தாந்தோணிமலை கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்
22-02-18

கரூர்: தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சாமி கோயிலில் மாசி திருவிழாவையொட்டிநேற்று கொடியேற்றம் நடைபெற்றது. தாந்தோணிமலை கலயாணவெங்கடரமணசாமி கோயில் மாசிமக தேர், தெப்பத்திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. வெள்ளிகருடவாகனம், உற்சவம் நடைபெற்றது. நேற்று காலை மாசிதிருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. மார்ச் 10ம்தேதி வரை தினமும் காலை பல்லக்கு உற்சவம், இரவு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. வரும் 27ம்தேதி காலை பல்லக்கு, மாலை 4.30மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 1ம்தேதி (வியாழன்) மாசி தேர்விழா நடைபெறுகிறது. காலை 9மணிக்கு வடம் ...

பள்ளிபாளையத்தில் ஓம்காளியம்மன் கோயில் விழா
22-02-18

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் ஓம்காளியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பள்ளிபாளையம் காவிரி கரை 24 மனை தெலுங்கு செட்டியார்கள் ஓம்காளியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 28ந்தேதி அதிகாலை 6 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு பொங்கல் வைத்தலும், மாலை 7 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும் ...

ADVERTISEMENTS
சங்கரன்கோவில் அழகுவடிவம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
22-02-18

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரசித்தி விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள அழகுவடிவம்மன் கோயில் மற்றும் சங்கரசித்தி விநாயகர் கோயிலில் 6ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சங்கரசித்தி விநாயகர் மற்றும் அழகுவடிவம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோமதிநாயகம், திருவாவடுதுறை ஆதீன ஆய்வாளர் சீத்தாராமன், பாலமுருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் தொழிலதிபர் ரத்தினம், பள்ளிகொண்டபெருமாள், சோமசுந்தரம், பழனிசாமி, வஉசி இளைஞரணியை சேர்ந்த ...

போளூர் அல்லிநகரில் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா
22-02-18

வேலூர்: போளூர் அல்லிநகரில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. போளூர் டவுன் அல்லிநகரில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேர்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இதையடுத்து, தினகரன் அணி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஏழுமலை, தேரை வடம் பிடித்து இழுத்து, தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் எம்.சேகர், ஆர்.செல்வராஜ், யுவராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் ...

காட்டுநெமிலி கிராமத்தில் மயானக்கொள்ளை திருவிழா : குழந்தையை ஏலம் விட்ட விநோதம்
22-02-18

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே காட்டுநெமிலி கிராமத்தில் உள்ள பழமையான அங்காளபரமேஸ்வரி கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது. மயானத்திற்கு வாண வேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சிங்க வாகனத்தில் அங்காளம்மன் புறப்பட்டது. அப்போது காட்டுநெமிலி, புல்லூர், பள்ளியந்தாங்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது விவசாய நிலத்தில் இருந்து கொண்டு வந்த கம்பு, உளுந்து, மணிலா உள்ளிட்ட விளைப்பொருட்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். மயானத்தில் கொள்ளை திருவிழா நடந்தது. அங்கு முன்னோர்களை ...

ADVERTISEMENTS
அங்காள பரமேஸ்வரி கோயிலில் திருக்கல்யாணம் சிறப்பு வழிபாடு
22-02-18

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை விழாவினையொட்டி சிவன்பார்வதி தேவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, மந்திரங்கள் ஓத திருக்கல்யாணம் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சீர்வரிசைகளுடன், பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முடிந்ததும் சிவன் பார்வதி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில், பக்தர்கள் ...

மாரியம்மன் கோயில் தேர்திருவிழா துவக்கம்
22-02-18

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் தேர்திருவிழாவை முன்னிட்டு, திருக்கம்பம் நடப்பட்டது. இதில் பெண் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர். பொள்ளாச்சி கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில், இந்த ஆண்டு மாசிமாத தேர்திருவிழா கடந்த 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து தினமும் 3நேரம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு கோயில் முன்பு திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. கரியகாளியம்மன் கோயிலில் இருந்து பூஜிக்கப்பட்ட திருக்கம்பம், மேள தாளம் முழங்க தெப்பக்குளத்துக்கு ...

திருச்செங்கோட்டில் சாய்பாபா பஞ்சலோக சிலை பிரதிஷ்டை
22-02-18

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேலூர் சாலையில் ஸ்ரீசத்ய சாய்மந்திரில் பாபாவின் பஞ்சலோக சிலை, பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை விழா நடந்தன. விழாவையொட்டி, கடந்த 17ம் தேதி கணபதி ஹோமம், யாகசாலை ஸ்தாபனம் நடந்தது. 18ம்தேதி யாகசாலை பிரவேசம், ருத்ரஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 19ம் தேதி கலசங்கள் புறப்பாடு, மகா கணபதி கும்பாபிஷேகம், பஞ்சமுக ஆஞ்சநேயர், சத்யசாய் பாபா பஞ்சலோக பிரதிஷ்டை நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை குருக்கள் ராஜப்பா, நாமக்கல் மாவட்ட ஸ்ரீ சத்ய சாயி சேவா ...

ADVERTISEMENTS
மழை வேண்டி கல்லிடைக்குறிச்சி கோயிலில் முளைப்பாரி திருவிழா
22-02-18

அம்பை: மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் கல்லிடைக்குறிச்சியில் முளைப்பாரி திருவிழா நடந்தது. கல்லிடைக்குறிச்சி கோட்டைத் தெருவில் உள்ள ஸ்ரீமுத்தாரம்மன், சந்தனமாரி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. கடந்த 13ம் தேதி கோயிலில் கால்நாட்டி பெண்கள் காப்புக்கட்டி முளைப்பாரி விதை விதைத்தனர். தொடர்ந்து தினமும் முளைப்பாரி பானையைச் சுற்றி காப்புக் கட்டிய பெண்கள் கும்மியடித்து வழிபாடு நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பெண்கள் கும்மியடித்தபடி முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்தனர். நேற்று காலை 6 மணிக்கு ...